விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி அறிவித்த இங்கிலாந்து…

உலகை ஆட்டி படைத்து வரும் உயிர்கொல்லி கொரோனா வைரசான அழிக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி இன்னும் 6 மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் கசிந்துள்ளன. அரசு வட்டார தகவல்களை சுட்டிக்காட்டி ‘தி டைம்ஸ்’ பத்திரிகை இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி குழந்தைகளின் பயன்பாட்டுக்கு எதிர்பார்த்ததை விட விரைவாக தடுப்பூசி வெளியாகிவிடும் என்றும் பெரியவர்களின் பயன்பாட்டுக்கு இன்னும் 6 மாதங்களுக்குள் தடுப்பூசி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகளை ஐரோப்பிய ஒன்றிய மருந்து முகமை ஏற்கனவே ஆராயத் தொடங்கி விட்டதாகவும், எனவே மற்ற நாடுகளை காட்டிலும் இங்கிலாந்தில் மிக விரைவில் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version