‘கொரோனா வைரஸால் இப்படி ஒரு பாதிப்பா?’ ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

கொரொனா வைரஸால் காதுகேளாமல் போகும் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்.

உலக நாடுகளையே ஒரு புரட்டு புரட்டிவிட்டது கொரொனா. உலகப் பொருளாதாரத்திலிருந்து மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் கொரோனா காலம் அபகரித்துவிட்டது.

இந்நிலையில்,கொரொனா காலம் இந்த வருடம் முழுவதும் நீடிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததுள்ளது.

அதனால் ஒவ்வொரு நாட்டு அரசும் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு சில பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரொனா வந்தால் கைகால் வலிகள், மூச்சுத் திணறல்,சளி, தலைவலி, தலைமுடி உதிர்தல், வாசனை உணர்திறன் இல்லாமல் போதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் கிருமிகள் ஹெர்பஸ் என்ற வைரஸைப் பின்பற்றுவதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்ப்பட்டவர்கள் காதுகேளாமல் போக வாய்ப்புண்டு என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version