சுற்றுலா பயணிகளுக்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை மலேசிய அரசு உத்தரவு!!

கொரோனாதொற்று நோய் பரவல்  பயம் காரணமாக மலேசியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  வருகைக்கு  ஏற்கனவே தடை விதித்திருந்த மலேசிய அரசாங்கம்  தற்போது அந்த தடையை இந்த  ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 8.40 லட்சத்தை  கடந்துள்ளது.  வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 8,40,431 பேர் கொரோனா  தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

 உலகமெங்கிலும் கொரோனாவால் 2,48,88,312 பேர்  பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 17,276,727 பேர்  குணம் அடைந்துள்ளார்கள்.  இதில்  அதிக பாதிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள்எண்ணிக்கை 60,94,544 ஆக  தற்போது உள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா  தொற்றுநோய் பரவல் குறைந்துவரும்  சூழ்நிலையில்,  தற்போது பல்வேறு விதமான தளர்வுகளுடன் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு  இருக்கின்றன.  அதே நேரத்தில்,  ரஷ்யா.அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன், மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் தொற்று  பாதிப்புகுறையாமல்  அதிகமாவது தொடர்ந்து வருகிறது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மட்டும் கொரோனா தொற்றுநோய் பரவல்  முழுவதுமாககுறைந்துள்ளது.  

இந்த நிலையில், ஏற்கனவே மலேசியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து இருந்த மலேசிய அரசு தற்போது சுற்றுலா தொடர்பாக  முக்கிய அறிவிப்பை அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  மலேசியா வருவதற்கான தடையை  நீட்டிப்பு செய்துள்ளது இந்த தடைதடை 2020ம் ஆண்டின் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது  என மலேசிய அரசு அறிவித்துள்ளது. மேலும்,அயல்நாட்டு எல்லைகள் மூடப்பட்டிருப்பது  இனியும் தொடரும் என்றும்  தெரிவித்துள்ளது.

தற்போது மலேசியாவில் 9306 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 9030 பேர் குணம்  அடைந்து இருக்கிறார்கள். 125 பேர்  உயிரிழந்துள்ளார்கள். தற்போது புதிய நோயாளிகள்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மலேசிய அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில்  மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து  பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு பிரதமர் முஹையதின் யாசின், உலகம் முழுவதும்  இந்த தொற்றுப் பரவல்  அதிகரிக்கவே செய்கிறது என்றும், இங்கு நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவ்வப்போது   இதனால் பலருக்கும் பாதிப்பு ஏற்படுவதாகும்  கூறியுள்ளார். 

Exit mobile version