உலக அளவில் பிரபலமான ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களில் ஒன்று Porn Hub. இந்த தளத்தில் கணித ஆசிரியர் ஒருவர் கணித வகுப்புகளை எடுத்து வருடத்திற்கு அவர் சம்பாதிக்கும் தொகை தான் தற்போது மிகவும் வைரலான செய்தியாக இருக்கிறது.
தைவானை சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட வீடியோக்களை அந்த ஆபாச இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவற்றில் எதுவும் ஆபாசம் இல்லை. அவை முழுக்க முழுக்க கணிதம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மட்டுமே அவற்றில் துளியும் ஆபாசம் இல்லை. மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தான் இவ்வாறு ஆபாச இணையதளத்தில் கணித வகுப்பினை நடத்தி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கணித ஆசிரியராக பள்ளியில் பணியாற்றி வரும் இவர் covid-19 பெரும் தொற்று காலத்தில் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது யூடியுப் வீடியோக்களில் தனது வீடியோக்கள் அவ்வளவாக வியூஸ் பெறாத நிலையில் ஆபாச இணையதளத்தில் தனது கணித வகுப்பு எடுக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதன் வாயிலாக அவர் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளார். தொடர்ந்து ஒரே வருடத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமாக அவர் வருமானமும் பெற்றுள்ளார்.
முதலில் 60 சதவிகித பார்வையாளர்கள் இது ஒரு நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று எண்ணியே உள்ளே சென்று பார்த்ததாகவும் பிறகுதான் உண்மையாகவே அது கணித வீடியோ எனவும் தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.