இந்த கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புகின்றன. ஆனால் பிரேசிலில் இருக்கும் பிரபல கார் ஷோரூம் நாயை பணியாளராக பணி அமர்த்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பிரபல கார் ஷோரூமான ஹூண்டாய் நிறுவனம், தங்கள் விற்பனை நிலையத்திற்கு நாய் ஒன்றை வேலைக்கு எடுத்துள்ளது. நான்கு கால் பணியாளர் என்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
pawfessional consultant’ என்று இந்த நாய்க்கு வேலை கொடுத்துள்ளனர். அந்த ஷோரூமிற்கு வரும் சக வாடிக்கையாளர்களுடன் நெருங்கி பழகுதல், வரவேற்றல் போன்ற காரணங்களால் டஸ்கனுக்கு பதவி உயர்வும் கொடுத்து கவுரவித்துள்ளது அந்நிறுவனம்.