எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க வகையில் போட்டோவுக்கு போஸ் குடுத்த மாடல் அழகி புகைப்படக்கலைஞருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எகிப்தை சேர்ந்த மாடல் அழகி சல்மா எல்ஷிமி (26). இவர் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், தென் கைரோ பகுதியில் அமைந்திருக்கும் சுமார் 4, 000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ட்ஜோஸர் பிரமிடு (Pyramid of Djoser) முன்பு சல்மா எல்ஷிமி அருவருக்கத்தக்க வகையில் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த போட்டோக்கள் வைரலானதையடுத்து இச்சம்பவம் தொல்பொருள் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சக அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சல்மா எல்ஷிமி மற்றும் அவரது புகைப்பட கலைஞர் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தற்போது தற்காலிகமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என தொல்பொருள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, சல்மாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : சூனியம் எடுப்பதாக பெண் ஒருவரை இரும்பு கம்பியால் குத்தி கொடுமை செய்த சூனியக்காரி