கொரோனா தடுப்பு மருந்துக்காக வயதானவர்களான பெண்கள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்துக்காக இளம்பெண்கள் இரண்டு பேர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒர்லாண்டோவில் கொரோனா தடுப்பு மருந்தை பெற வயதானவர்ளை போல வேடமிட்டுக் கொண்ட  பெண்கள் இருவரையும் சுகாதார துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த பெண்கள் இருவருக்கும் 34 மற்றும் 44 வயது என கண்டறிந்துள்ளனர். பெண்கள் இருவரும் தங்களது இரண்டாவது கொரோனா மருந்தை பெற வந்திருந்த போதும் கையும், களவுமாக சிக்கியிருந்தனர். இருந்தாலும் அவர்கள் இருவரும் தங்களது முதல் தடுப்பு மருந்தை எப்படி பெற்றனர் என்பது புரியாத புதிராக இருப்பதாக தெரிவித்துள்ளனர் சுகாதார அதிகாரிகள். அவர்களது டிரைவிங் லைசன்ஸ் மற்றும் சுகாதார அட்டையில் இருந்த வயது வித்தியாசத்தினால் ஏற்பட்ட சந்தேகம் அவர்கள் சிக்க காரணம் என தெரிவித்துள்ளனர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version