தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்து ஒரு பேஸ்புக் பயனாளர் தொடர்ந்த வழக்கில் 41 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாயை இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றமானது உத்தரவிட்டு இருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு கடந்த 2022-ம் ஆண்டு முடக்கப்பட்டு இதன் காரணமாக அவர் கூறுகையில், நான் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன். ஆனால், எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் தடை செய்யப்படுவதாக பேஸ்புக் தெரிவித்தது. எனது கணக்கு முடக்கப்பட்டதற்காக நீளமான விளக்கத்தை அது கொடுத்தது. அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்ததாகவும், அது பேஸ்புக் விதிகளை மீறும் செயல் எனவே கணக்கு தடை செய்யப்பட்டு முடக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், நான் விதியை மீறும் வகையில் எந்த பதிவுகளையும் பார்க்கவில்லை என்று கூறினார். மேலும், முடக்கப்பட்ட தனது பேஸ்புக் கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். ஆனால், அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசன், எந்த வித காரணமும் இன்றி தனது கணக்கை முடக்கிய பேஸ்புக் மீது ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கானது விசாரிக்கப்படுகையில் ஜெசனின் கணக்கை முடக்கியதற்கான காரணத்தை பேஸ்புக் நிறுவனத்தால் தெரிவிக்கமுடியவில்லை. இதனை தொடர்ந்து எந்த வித காரணமும் இன்று பயனாளரின் பேஸ்புக் கணக்கை முடக்கியதற்காக சம்பந்தப்பட்ட பயனாளருக்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 41 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து முடக்கப்பட்ட ஜெசனின் பேஸ்புக் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் வழக்கு தொடர்ந்த ஜெசனுக்கு 50 ஆயிரம் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அந்த தொகையை பேஸ்புக் இதுவரை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து 21 லட்சம் இழப்பீடு தொகையை சுருட்டிய பேஸ்புக் பயனாளி
-
By mukesh

Related Content
3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!
By
daniel
September 1, 2025
யார் ஆம்பளை என்று கேட்பவரா கட்சியின் தலைவர்?
By
daniel
February 17, 2023
நிதி அமைச்சகத்தில் மாதம் ரூ.67700-209200/- சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் 2021
By
Vinoth
April 29, 2021
தென்கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2021
By
Vinoth
April 29, 2021
10, 12வது படித்திருந்தால் போதும் இந்திய கடற்படையில் 2500 காலி பணியிடங்கள்...!!
By
Vinoth
April 28, 2021
NCRTC – போக்குவரத்துக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021
By
Vinoth
April 28, 2021