ஆப்கானிஸ்தானில் வான்வெளி தாக்குதல் : பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்துவருகிறது.தொடர்ந்து நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசும்,தலீபான் பயங்கரவாத அமைப்பும் கடந்த செப்டம்பர் மாதம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

Read more – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் : துணைவேந்தர் சற்குணராஜா உறுதி

ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள நிம்ருஸ் மாகாணம் காஷ் ரோடு என்ற மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவம் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த 15 பேரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வான்வெளி தாக்குதல் குறித்து இதுவரை ஆப்கானிஸ்தான் ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை.

நேற்று காலை நடந்த கார் குண்டுவெடிப்பில் மக்கள் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஷியா வடான் என்பவர் உள்பட 3 பேர் பலியாகினர். அதேபோல், கடந்த டிசம்பர் 15 ம் தேதி காபூலின் துணை கவர்னர் மஹபூபுல்லா மொஹேபியை காரில் குண்டு வைத்து பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version