அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்:
அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் மீது ஏமி டோரிஸ் என்கிற மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1997 ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த டென்னிஸ் தொடரின் போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதில் ஏமியும் கலந்து கொண்டுள்ளார். அப்போது ட்ரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி தனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ஏமி தன் விருப்பத்திற்கு மாறாக ட்ரம்ப் தன்னை இறுக பற்றி அணைத்து முத்தமிட்டதாகவும் அவரது பிடியில் இருந்து வெளியே வர முயன்றபோதும் முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ம் தேதி நடைபெற உள்ள இந்த நிலையில் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்,பிரச்சார நேரத்தில் அமெரிக்க அதிபர் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 23 ஆண்டுகள் கழித்து சரியாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மாடல் நடிகை புகார் அளித்தது அந்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.இது குறித்து பேசிய ட்ரம்ப், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை திசை திருப்பியுள்ளார்கள் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், ட்ரம்ப்க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறை அல்ல. இதுவரை 12 க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது எழுந்து உள்ளது .