அங்கோலா நாட்டில் உள்ள ஹம்போ எனும் மாகாணத்தில் தங்க சுரங்கங்களில் சட்டவிரோதமாக பலர் பணியாற்றி வருகின்றனராம். இதனால் இந்த பகுதிகளில் பல முறை விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை ஆணையர் பிரான்சிஸ் அவர்கள், அங்கோலா நாட்டில் பைலுண்டோ, உகுமா, சின்சென்ஜ், லாங்கோன்ஜோ, காலா, ஷிகாலா, சோலோஹங்கா மற்றும் ஹம்போ ஆகிய மாகாணங்களில் தங்க சுரங்கங்களில் சட்ட விரோதமாக பலர் பணிபுரிய வைக்கப்படுகின்றனர். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்த தங்க சுரங்கங்களில் பணியாற்றிய 11 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.