ஆளுமை மிக்க பெண் தலைவராக தமிழிசை தேர்வு …

உலக சீரமைப்பில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த வருடம் விருதுக்கான பட்டியலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இடம்பெற்றுள்ளார்.

சிகாகோ :

மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கும் முன்னணி பெண் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா, ர‌‌ஷியா போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 7 ம்தேதி சிகாகோவில் 9 வது ஆண்டு மகளிர் தின விழாவில் அமெரிக்க எம்.பி. டேனி கே.டேவிஸ் காணொளி காட்சி மூலம் விருதுகளை வழங்குகிறார்.

இந்த ஆண்டுக்கான ஆளுமைமிக்க பெண் தலைவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்-க்கும், 2 வதாக விருது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வழங்க இருக்கின்றனர்.

Read more – பா.ஜ .கவில் சேர்ந்த பத்தே நாட்களில் முதல்வர் வேட்பாளர் : அரசியலிலும் அசத்தும் மெட்ரோ மேன்

மேலும், இதேபோல் பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய 20 பெண்களுக்கும் இந்த விருதுகள் வழங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version