Site icon SeithiAlai

டீசல் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது 9 பேர் உடல் கருகி பலி 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்

லிபியாவில் டீசல் சேகரிக்க சென்ற 9 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான லிபியாவின் பெண்ட் பய்யா நகரில் டீசல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி திடீரென கவிழ்ந்தது. இதில் டீசல் சாலையில் கொட்டி ஓடியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபரீதம் தெரியாமல் அந்த டீசலை எடுக்க ஓடி வந்தனர். அப்போது டீசல் லாரி டேங்கர் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் அருகில் இருந்த 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நிலை படுமோசமாக உள்ளதால் பலியின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version