Site icon SeithiAlai

ஒமைக்ரானுக்கு எதிராக புதிய தடுப்பூசி அறிமுகம்

ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்படக்கூடிய தடுப்பூசிக்கு ஜப்பான் அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தீவிரம் இன்னும் குறைந்தபாடில்லை.பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு தினமும் கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்தநிலையில்,  ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்படக்கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் இணைந்து இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளன.

Exit mobile version