சோமாலியாவில் கடும் வறட்சி 1 மில்லியன் மக்கள் இடப்பெயர்வு

சோமாலியா நாட்டில் சுமார் 1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.

ஒரு கோடியே 59 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடு சோமாலியா. காலநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உணவுப்பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சோமாலிய நாட்டில் பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வரும் மாதங்களில் 5 மில்லியனில் இருந்து 7 மில்லியனாக  அதிகரிக்கும் என்று ஐநா அகதிகளுக்கான முகமை கூறியுள்ளது. மேலும், நடப்பாண்டில் மட்டும் 7 லட்சத்து 55 ஆயிரம் பேர் தண்ணீரைத் தேடி வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version