சீனாவின் உளவுக்கப்பல் இலங்கையை வந்தடைந்தது

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5  இலங்கை ஹம்பன் தோட்டா துறைமுகத்தை சென்றடைந்தது.

சீனாவின் உளவு கப்பலை இலங்கை அனுமதிக்கூடாது என இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இலங்கை கப்பல் நுழைவதற்கு தடை விதித்தது. இந்த நிலையில், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள்ளக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் தற்போது, கப்பலுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து 750 கி.மீ தூரம் சுற்றளவை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. கப்பல் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, இந்தியாவின் சார்பில் சமுத்திரத்தை கண்காணிக்கக் கூடிய விமானம் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version