SeithiAlai

10 புள்ளைக்கு மேல பெத்தா ₹13 லட்சம் பரிசு… அட செம ஆப்பர்ல

10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ₹13 லட்சம் பரிசும் மதர் ஹீரோயின் என்ற பட்டமும் வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

A 23-Year-Old Woman Has 11 Babies Already and Wants to Have a Lot More |  Hiptoro

இந்தியாவை விட 5 மடங்கு பரப்பளவு அதிகம் கொண்ட நாடு ரஷ்யா. இந்த நாட்டின் மக்கள்தொகை 14 கோடியே 51 லட்சம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் அங்கு சரிந்து வருகிறது. குறிப்பாக நடப்பாண்டில் மட்டும் 4 லட்சம் சரிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 மடங்கு குறைவு. 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 மடங்கு குறைவு. இதனை கருத்தில் கொண்டு ரஷ்யாவில் 10 மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு  ஒரு மில்லியன் ரூபிள் (இந்திய மதிப்பில் சுமார் ₹13 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும், மதர் ஹீரோயின் என்ற பட்டமும், ரஷ்யகொடி பொருந்திய தங்கப்பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள். ரஷ்யாவில் இதுபோன்று அறிவிக்கப்படுவது முதல்முறையல்ல.இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட அப்போதைய ரஷ்ய அதிபர் ஜோசப், இதே திட்டத்தை செயல்படுத்தினார். அப்போது 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பரிசை பெற்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்திவரும் தற்போதைய சூழலில் மீண்டும் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version