நேபாளத்தில் ’அம்ரித் கோஷ்’ என்ற பெயரிலான தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டுள்ளது.
குறைமாதத்தில் பிறந்த மற்றும் ஆபத்தான நிலையில் இருக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக உலக முழுவதும் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. NMICS 2019 இன் அறிக்கையின்படி, நேபாளத்தில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதம் பேர் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் குடிக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 62 சதவீதம் பேர் தாய்ப்பால் குடிக்கிறார்கள்.
இந்த நிலையில், நம் அண்டை நாடான நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி நேற்று துவங்கப்பட்டது. தலைநகர் காத்மாண்டுவில் பரோபகார் மகப்பேறு மருத்துவமனையில் யுனிசெப் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கியை அந்நாட்டு குடியரசுத்தலைவர் பித்யா தேவி பண்டாரி திறந்து வைத்தார்.