தடையை நீக்கியது பிபா

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிபா அமைப்பு நீக்கியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற திட்டமிட்டு ஆயத்த பணிகள் நடந்து வரக்கூடிய சூழலில் மூன்றாம் நபரின் தலையீடு இருப்பதாக கூறி பிபா அமைப்பு, இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு தடை விதித்தது. இதனால் போட்டிகள் நடைபெறுமா என்று அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சகம் பிபா அமைப்பிற்கு கடிதம் எழுதியது.

இதையடுத்து, பிபா தடையை நீக்கியுள்ளது. மேலும், ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 30 வரை திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பிபா அமைப்பு அறிவித்துள்ளது.

Exit mobile version