உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்

உலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், நாடுகளின் பொருளாதார வலிமை கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலகின் பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான புளூம்பெர்க் நடத்திய ஆய்வில் கடந்தாண்டில் கடைசி 3 மாதங்களில் பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருந்த பிரிட்டனை 6வது இடத்திற்கு தள்ளி இந்தியா 5ம் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 854 பில்லியன் கோடி டாலராக உயர்ந்துள்ள நிலையில், பிரிட்டனின் பொருளாதாரம் 814 பில்லியன் கோடி டாலராக சரிந்துள்ளது. பொருளாதார வலிமை மிகுந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன. 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Exit mobile version