ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 2% டூ 13% அதிகரிப்பு

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு 2% இருந்து 13% ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் பேசிய அவர், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் துவங்கியபோது அந்நாட்டிடம் இருந்து இந்தியா 2% கச்சா எண்ணெயை மட்டுமே இறக்குமதி செய்தது. அது சில மாதங்களிலேயே 13% ஆக அதிகரித்து விட்டது. சலுகைவிலையில் கச்சா எண்ணெயை அளிக்க ரஷ்யா முன்வந்தபோது அதை வாங்குவதென்று துணிச்சலாக பிரதமர் முடிவெடுத்தார். அதன் விளைவு நாட்டின் இறக்குமதி செலவை குறைக்க உதவியுள்ளது என்று பெருமையோடு கூறினார்.

ஆனால், பெட்ரோல், டீசல் விலை மட்டும் இன்னும் குறையாமல் இருப்பது ஏனோ?

Exit mobile version