குருணை (உடைந்த அரிசி) ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

குருணை ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பாசுமதி அல்லாத அரிசிகளின் (புழுங்கல் அரிசி தவிர) ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

இதேபோல் உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவும் நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. கால்நடை தீவனம் மற்றும் எத்தனால் கலப்பு திட்டத்துக்கு போதுமான அளவில் குருணை கிடைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version