சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கு என்ன மாதிரியான சவால்களை (சிக்கல்களை) சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்திய அரசு விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
*சீனாவில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள FMGE (வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி)தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
*கடந்த 2015 முதல் 2021 வரை இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) மூலம் FMGE தேர்வில் பங்கேற்ற 40,417 மாணவர்களில் 6,387 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது,சீனாவில் மருத்துவம் படித்ததில் 16% பேர் மட்டுமே FMGE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை, மாணவர்களும், பெற்றோர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
*சீன அரசால் அனுமதிக்கப்பட்ட 5ஆண்டு மருத்துவ படிப்பு &ஓராண்டு இன்டர்ன்ஷிப் வழங்கும் 45 பல்கலைக்கழகங்களில் மட்டுமே சேர வேண்டும். பிற கல்லூரிகளில் சேரக்கூடாது.
*எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன் அதன் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
*சீனாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்த நாட்டிலேயே பயிற்சி பெற உரிமம் பெற வேண்டும்.இதற்கு இன்டர்ன்ஷிப் முடிந்தபிறகு மாணவர்கள் சீன மருத்துவ தகுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
* இந்திய மாணவர்கள் சீன மொழியில் வழங்கப்படும் மருத்துவ கல்வி திட்டத்தில் சேர அனுமதி கிடையாது. எனவே, இருமொழி முறையில் (ஆங்கிலம் &சீன மொழி) பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் மட்டுமே சேர வேண்டும்.
* சீன மொழியான புடோங்குவாவை கற்றுக்கொள்வது அங்கு கட்டாயமாகும்.
*மேலும், சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே FMGE தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.