டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நூற்றுக்கணக்கான கார்களில் அணிவகுத்து வருகின்றனர்.
கனடா:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டம் தொடர்பாக மத்திய அரசு இன்று 2 ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தனது கருத்தை உரிமைகளைப் பாதுகாக்க விவசாயிகள் ஒன்றினைந்து நடத்தி வரும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதுமே ஆதரவளிக்கும்” தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில்,டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முதல் இந்திய துணை தூதரகம் வரை கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் கார் பேரணி நடத்தினர்.இந்த பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் பதாகைகள் மற்றும் கனடா கொடிகளை ஏந்தி தங்கள் கார்களில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.