சீனாவில் உள்ள இந்திய மாலுமிகள் 39 பேருக்கு அவரச சிகிச்சை அளிக்க அனுமதி வேண்டும் : சீனாவிடம் இந்தியா வேண்டுகோள்

சீனாவில் உள்ள இந்திய மாலுமிகள் 39 பேருக்கு அவரச சிகிச்சை அளிக்க அனுமதி வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவை சேர்ந்த எம்.வி. ஜாக் ஆனந்த் மற்றும் எம்.வி. அனஸ்தாசியா என்ற சரக்கு கப்பல்கள் சீனாவின் உள்ள ஜிங்டாங், காபீடியான் துறைமுகங்களில் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படாததால் கடலில் நங்கூரமிட்டு பல மாதங்களாக 39 ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

துறைமுகங்களில் 2 கப்பல்களையும் சரக்குகளை இறக்கவும், பணிக்குழு மாற்றத்துக்கும் அனுமதிக்க வேண்டும் எனவும், மாதக்கணக்கில் காத்திருக்கும் இந்த கப்பல்களில் இருக்கும் மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி மனஅழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் அவர்களை தரையிறக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக அனைவரும் தனிமை படுத்தப்பட வேண்டும். அந்த முறையை பின்பற்றினால் கப்பல் பணிக்குழுவை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், ஜிங்டாங் துறைமுகத்தில் பணிக்குழு மாற்ற அனுமதி இல்லை என்றார் .

தற்போது, சரக்கு கப்பல்களில் உள்ள மாலுமிகளை இறக்க விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

Read more – விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற தயாராக இல்லை : ப.சிதம்பரம்

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா சீன அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது, நீண்ட நாள் தாமதம் காரணமாக கப்பலில் உள்ள பணிக்குழு கடுமையான சூழல் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மனஅழுத்தத்தை குறைக்கவும், விரைவில் அவர்களை அனுமதிக்கவும் சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

மேலும், கப்பலில் சிக்கியிருக்கும் இந்திய மாலுமிகளுக்கு உதவுவதற்காக விருப்பம் தெரிவித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கைகளை நாங்கள் கவனத்தில் கொண்டு உதவிகள் அவசரமாகவும், காலவரையறைக்கு உட்பட்டும் இந்த நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version