உலக சுகாதார அமைப்பின் தற்போதைய காசநோய் தடுப்பு திட்டத்திற்கு மிகவும் தேவையான மருத்துவ உதவியுடன் வட கொரியாவுக்கு உதவ இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா தற்போது உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை ஏற்று வடகொரியாவுக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகளை வழங்கியுள்ளது. `கொரியாவில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு குறிந்து அறிந்ததும் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள காசநோய் எதிர்ப்பு மருந்தை வட கொரிய அதிகாரிகளிடம் இந்திய தூதர் அதுல் மல்ஹாரி கோட்சர்வே உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி முன்னிலையில் ஒப்படைத்தார்.