இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் இங்கிலாந்து, அமெரிக்கா… விரைவில் வந்தடையும் சிகிச்சை கருவிகள்..

இந்தியாவில் ஏற்பட்டுள்ள தீவிர கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள் முன் வந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள தீவிர கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள் முன் வந்துள்ளனர். தற்போது ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கருவிகள், மருத்துவ சாதனங்கள் தேவை அதிகமாக இருக்கிறது என தெரிவித்த இங்கிலாந்து தற்போது 495 ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களையும், 120 வெண்டிலேட்டர் கருவி, 2 பிரதான வெண்டிலேட்டர் கருவிகள், 60 மருத்துவ சாதனங்க அனுப்பி வைத்துள்ளது.

Read more – ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பெரும்பாலான கட்சிகள் அனுமதி..

அதேபோல், அமெரிக்காவும் கொரோனா சிகிச்சை கருவிகள், பரிசோதனை கருவிகள், வெண்டிலேட்டர், பெர்சனல் புரொடெக்டிவ் சாதனம் ஆகியவற்றை அனுப்பியதோடு, விஷீல்டு மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்களை அனுப்ப அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜெர்மனி, ஐரோப்பா போன்ற பல்வேறு மருத்துவ சாதனங்களையும் அனுப்பவும், பாதிப்புகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்குவதற்காக ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version