ஏலத்திற்கு வரும் ஹிட்லர் பயன்படுத்திய “டாய்லெட் கவர் சீட் ” : வாங்க போட்டியிடும் முக்கியஸ்தர்கள்

ஹிட்லர் பயன்படுத்திய டாய்லெட் கவர் சீட் வருவதால் அதை வாங்க கடும் போட்டி நிலவுவதாக தகவல் கிடைத்துள்ளது.

வாஷிங்டன் :

பல முன்னணி நாடுகளுக்கு சிம்ம சொற்பனமாய் காணப்பட்ட நாசிப் படையின் தலைவர் அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய பொருட்கள் அவ்வப்போது ஏலத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். அது போல, ஹிட்லர் பயன்படுத்திய டாய்லெட் கவர் சீட்டை அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த ஒரு படைவீரர் திருடியுள்ளார். தற்போது அந்த டாய்லெட் கவர் சீட்டானது நீண்ட வருடங்களுக்கு பின்பு ஏலத்திற்கு வந்துள்ளது.

Read more – எந்திரன் கதை திருட்டு வழக்கில் எனக்கு எந்த பிடிவாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை : இயக்குனர் ஷங்கர் விளக்கம்

ஹிட்லர் முதலாம் உலக போரின்போது பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடை மற்றும் அவரே கைப்பட வரைந்த இரண்டு ஓவியங்களையம் இந்த அமெரிக்க வீரர் தான் திருடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த ஏல நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

இதனால் பல நாடுகளில் உள்ள முக்கியஸ்தர்கள் அந்த பொருளை வாங்குவதற்கு கடும் போட்டி கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version