அமெரிக்க அரசின் சுகாதாரத்துறை துணை செயலாளராக திருநங்கை ரேச்சல் லெவின் : ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்க அரசின் சுகாதாரத்துறை துணை செயலாளராக திருநங்கை ரேச்சல் லெவினை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

வாஷிங்டன் :

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

ஜோ பைடன் தலைமையில் அமைய இருக்கும்புதிய அரசின் முக்கிய பொறுப்புகளுக்கு தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வரும் நிலையில், சுகாதாரத்துறை துணை செயாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை டாக்டர் ரேச்சல் லெவின் பெற்றுள்ளார்.

Read more – சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா : 138 மணி நேரத்தில் கட்டப்பட்ட கொரோனா முகாம்கள்

மேலும், இவர் தற்போது பென்சில்வேனியா சுகாதார செயலாளராகவும், மாநில மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மனநல பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து ஜோ பைடன் தெரிவிக்கையில், அமெரிக்க நிர்வாகத்தின் சுகாதார முயற்சிகளை வழிநடத்த உதவும் தகுதி வாய்ந்த தேர்வு லெவின் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version