அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஒரு மணி நேர அமெரிக்க அதிபராக பதவி வகித்தார்.
மருத்துவ பரிசோதனைக்காக அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக, மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சையில் இருந்து குணமாகும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதன் மூலம் ஒரு மணி நேரம் 25நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்ததாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.