அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும்…. கமலா ஹாரிஸின் மழையில் நடனமாடும் வீடியோ வைரல்.
அமெரிக்க நாட்டில் அடுத்த மாதம்வரவுள்ள அதிபர் தேர்தல் ஒட்டுமொத்த உலக கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார்., அவரை எதிர்த்து ஜோபிடன் என்பவர் போட்டியிடுகிறார்.துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
அவர் இத்தேர்தலில் ஜெயித்தால் அமெரிக்க வரலாற்றில் முதல் கறுப்பின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பினைப் பெறலாம்.
இந்நிலையில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன் தினம் அவர் புளோரிடா மாகாணத்த்டில் உள்ள ஜாக்சன்விலே நகரில் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்தார். அப்போது திடீரெனப் பெய்த மழையில் கமலா ஹாரிஸ் குடையைப் பிடித்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார். பின்னர் குடையைப் பிடித்தபடி மழையில் நடனமாடினார்.
இதை அவரது ஆதரவாளர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதுகுறித்த ஒரு புகைப்படத்தைப் பதிவிட்ட கமலா ஹாரிஸ் ஜனநாயகம் என்பது மழையோ வெயிலோ யாருக்காகவும் காத்திருப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.