கொரோனா கால பணிக்காக உலகின் முதல் சிந்தனையாளர் இடத்தினை பிடித்துள்ளார் கேரள பெண் சுகாதாரத்துறை அமைச்சர்!

கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முன் மாதிரியாக செயல்பட்டு, தொற்றினை கட்டுக்குள் வர பணியாற்றிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உலகின் ஐம்பது சிந்தனையாளர்கள் பட்டியியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனாவின் ஆரம்ப காலக்கட்டத்தில், மற்ற நாடுகளில் கொரோனா அதிதீவிரம் காட்டிவந்த நிலையில், கேரள மாநிலத்தின் வழியாக தான் முதலில் இந்தியாவிற்குள் தொற்று பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை முன்னரே உணர்ந்து, அதன் தாக்கங்களை முழுமையாக புரிந்து கொண்டு செயல்பட்டவர் தான் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா என்று இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த “பிராஸ்பெக்ட்” என்ற பத்திரிக்கை பாராட்டியுள்ளது.

மேலும் இந்த “பிராஸ்பெக்ட்” என்ற பத்திரிக்கை, உலகின் சிறந்த ஐம்பது சிந்தனையாளர்கள் பட்டியல் தொடர்பாக மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டதில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனை பின்னுக்குத் தள்ளியுள்ளி முதலிடம் பிடித்துள்ளார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா. மேலும் கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துதல், கண்காணித்தல், சிகிச்சை அளித்தல் மூலம் அவசரகால நடவடிக்கைகளை எடுத்தவர் என்றும், அரசு அலுவல் சார்ந்த கூட்டங்களைக்கூட சமூகஇடைவெளியுடன் கடைப்பிடித்தவர் என்றும் கே.கே சைலஜாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Exit mobile version