நாட்டு மக்களிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் உன்!!!

உலகில் யாரும் புரிந்து கொள்ள முடியாத நாடாகவும் மற்ற நாடுகளுடன் தொடர்பில் இல்லாதா நாடாகவும் வடகொரியா என்ற நாடு மக்கள் மத்தியில் அறியப்பட்டு வருகின்றது.

அந்நாட்டின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகாரியாகவும் உலக நாடுகளுக்கு எதிரியாகவும் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறார். கிம் ஜாங் உன் கொடுக்கும் உத்தரவுகளும் அளிக்கும் தீர்ப்புகளும் மிகவும் கொடூரமனவையாகவும் வினோதமானவையாகவும் இருக்கும் என்ற பிம்பம் உலக நாடுகள் மத்தியில் பொதுவாக நிலவி உள்ளது. 

வடகொரியாவில் கொரோனா பரவாமல் இருக்க நாட்டுக்குள் நுழைய முயல்பவரை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது சமீபத்தில் உலக நாடுகளிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக மிகவும் கொடூரமானவர் என சித்தரிக்கப்படும் நிலையில் கிம் ஜாங் உன், நாட்டு மக்களிடம் கண்ணீர் சிந்தி மன்னிப்பு கேட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 10 ஆம் தேதி அந்த நாட்டில் ஆளும் கட்சியின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் மிகப்பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மக்களிடையே பேசிய அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், புயல் ஏற்பட்ட காலகட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் கொரோனா நாட்டில் பரவாமல் தடுத்ததற்காகவும் அவர் தனது ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார தடைகள், இயற்கை பேரிடர் உள்ளிட்ட போன்ற பல்வேறு காரணங்களால் நாட்டு மக்களின் வாழ்க்கை மேம்படுத்த முடியாமல் போய் விட்டதாகவும் இதற்காக மக்களிடம் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறி கண்கலங்கினார்.  இதனை கண்டு அந்நாட்டு ராணுவ வீரர்களும் பொதுமக்களும் கண்கலங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Exit mobile version