இந்தோனேஷியாவை சேர்ந்தவர் கொய்ருல் அனம் (Khoirul Anam). இவர் சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்தார்.
அந்த புகைப்படங்களில் குக்கரை மணப்பெண் போல அலங்காரம் செய்தும் இவர் திருமண உடையில் நிற்பது போன்று இருந்தது. அதில் கேப்ஷனாக, நான் ’குக்கரை’முறைப்படித் திருமணம் செய்துகொண்டேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் குக்கரை திருமணம் செய்து கொண்டதற்கான காரணங்களாக’அது வெள்ளையாக இருக்கிறது. அன்பு செலுத்துகிறது. நான் சொன்னதை கேட்கிறது. நீ இல்லை என்றால் எனக்கான அரிசி வேகாது’ என்று டச்சிங்காகக் கூறியிருந்தார். பிறகு குக்கரை முத்தமிடும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட நான்கே நாட்களில் குக்கரை விவாகரத்து செய்து விட்டேன் என்று மற்றொரு பதிவை போட்டிருக்கிறார் கொய்ருல்.
அதில், இப்போது குக்கரை விவாகரத்து செய்துவிட்டேன். ஏனென்றால், அது சோறை மட்டுமே வேக வைக்க செய்யும் வேலை பார்க்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த போஸ்ட்டும் வேகமாக பரவி வருகிறது.
பிறகு குக்கர் வேறு என்ன வேலை செய்யவேண்டும் என்று அந்த இளைஞர் எதிர்பார்த்திருப்பார் என சமூக வலைதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.