நேபாளத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

காத்மாண்டு:
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது .
இந்த நிலையில், நேற்று இரவு கனமழை காரணமாக சிந்துபால்சவுக் மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள 18 வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த வீடுகளில் வசித்த 12 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.