விண்வெளி குப்பைகளை அகற்ற புது ஒப்பந்தம்… வியப்பில் நாசா!!!

விண்வெளியில் இருக்கும் குப்பைகளை வருகின்ற 2025 ஆண்டுக்குள் அகற்ற சுவிட்சர்லாந்தை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமும், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சியும் ஒப்பந்தம் செய்துள்ளது.
Space Junk

சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிளியர் ஸ்பேஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சியும் விண்வெளியில் இருக்கும் குப்பைகளை அகற்ற ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி, வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள்ளாக, விண்வெளியில் இருக்கும் குப்பைகள் முழுவதையும் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்திற்க்காக 102 மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

விண்வெளியில் ராக்கெட்டுகள் ஏவப்படும்போது, செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டதும், ராக்கெட்டுகள் தனியே கழன்றுவிடும். இவ்வாறு தனியே பிரிக்கப்படுபவை அனைத்தும்  விண்வெளியிலேயே தங்கி, அங்கேயே மிதந்துக் கொண்டு வரும்.

மேலும், மனிதர்கள் ஆராய்ச்சியின்போது விட்டுவிட்டு வரும் குப்பைகளும், விண்வெளியை விட்டு வெளியில் வர முடியாமல், அங்கேயே தேங்கி விடுவதால், குப்பைகள் பெருகி உள்ளதாக ஆராய்ச்சி நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சியும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான கிளியர் ஸ்பேஸ்-ம் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது. அதன்படி, குப்பைகளை அகற்றுவதற்காவே பிரத்தியேகமாக ஓர் ஸ்பேஸ்கிராப்ட்-ம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஸ்பேஸ்கிராப்ட், விண்வெளியில் உள்ள குப்பைகளை பூமிக்கு கொண்டு வர உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியைச் சுற்றி ஏகப்பட்ட விண்வெளிக் குப்பைகள் சுழன்று கொண்டிருப்பதால், இது பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கடுமையாக எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில், உலகிலேயே முதன்முறையாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்வெளியை சுத்தப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆத்தியுள்ளது. இதனால் புவி வட்டப் பாதை சுத்தமாகும் என்றும், இந்த முயற்சி வெற்றிப்பெற வாழ்த்து தெரிவித்தும் பல விஞ்ஞானிகள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதுக்குறித்து அறிந்த நாசாவும் வியப்பில் ஆழ்ந்துள்ளது.

Exit mobile version