அமெரிக்க நுழைவுச்சான்றின் (ஒர்க் விசா) புதிய விதிமுறைகள்: யாருக்கெல்லாம் பாதிப்பு?

அயல்நாட்டு ஊழியர்கள் வருவதை ஆண்டு இறுதிவரை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் திட்டம்: கொரோனாவால் அமெரிக்க பொருளாதாரம் அதிக பாதிப்படையாமல் இருக்க முயற்சி

H-1B

‘Highly Skilled’ வகை ஊழியர்களுக்கு, பெரும்பாலும் தொழில்நுட்பத் துறையில் வழங்கப்படும் இந்த விசாக்கள் 6 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகக் குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது

H-2B

வேளாண்மை அல்லாத ஊழியர்களுக்கு, பெரும்பாலும் உணவகத் துறையில் வழங்கப்படும் இந்த விசாக்கள் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

H-4

H-1B, H-2B உரிமையாளர்களின் கணவர்/மனைவி, பிள்ளைகளுக்கு இந்த விசாக்கள் வழங்கப்படும். H-1B விசாக்கள் செல்லுபடியாகும் வரை இவற்றையும் பயன்படுத்தலாம். புதிய விதி முறையில், கட்டுப்படுத்தப்பட்ட விசா உரிமையாளர்களுடன் வேறு யாரும் வர அனுமதி இல்லை

J-1

கலாச்சார பரிமாற்றங்களுக்கு வழங்கப்படும் இந்த வகை விசாக்கள் 6 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இன்டெர்ன், ஆசிரியர்கள், பயிற்சி பெறுபவர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படுகிறது

J-2

J-1 விசா உரிமையாளர் குடும்பத்தாருக்கு வழங்கப்படுகிறது. J-1 விசாக்கள் செல்லுபடியாகும் வரை இவற்றை உபயோகிக்கலாம்

L-1

உயர் நிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த வகை விசாக்கள் 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

L-2

L -1 விசா உரிமையாளர் குடும்பத்தாருக்கு வழங்கப்படுகிறது. L-1 விசாக்கள் செல்லுபடியாகும் வரை இவை இயங்கும்

Exit mobile version