ஆப்பிரிக்க நாட்டுகளில் ஒன்று ஈகுவடோரியல் கினியா நாடு. இந்த நாட்டில் தற்போது மார்பர்க் என்கிற புதிய வைரஸ் பரவி வருகின்றது. இந்த வைரசானது எபோலா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. மேலும் இது அதிகமாக பரவும் தன்மை கொண்டது. இதையடுத்து அந்நாடு உலக சுகாதாரம் அமைப்பிடம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வைரஸ் கடுமையான தலைவலி, காய்ச்சல் மற்றும் நோயாளிகளுக்கு ஏழு நாட்களில் ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதையடுத்து உயிரிழந்த 9 பேருடைய மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மார்பர் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நோய் பாதிப்புகுள்ளான மண்டலங்கள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு இந்த நாட்டிற்கு 500 சுகாதார உபகரணங்களையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.