எங்கு திரும்பினாலும், ‘டிராபிக் ஜாம்’ என கவலைப்படுகிறீர்களா? இனி, அந்த கவலை வேண்டாம். போக்குவரத்து நெருக்கடியில் சிக்கும் அவதி இல்லாமல் பறந்து செல்லும் வகையில் பைக் தயாராகி உள்ளது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பறக்கும் பைக் பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. A.L.I டெக்னாலஜிஸ் நிறுவனம் X Turismo லிமிடெட் எடிஷன் என்ற புதிய வகை ஹோவர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பைக்கில் வழக்கமாக இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சினுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்கும் நான்கு மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் மூலம் வானில் 40 நிமிடங்கள் வரை 100 கிலோ மீட்டர் வேகம் வரை பறக்க இயலும்.
ஜப்பானின் ஃபுஜி மலை அருகே சோதனை ஓட்டத்தின்போது வானில் ஹோவர் பைக் வட்டமிட்ட காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் ஆபத்தில் இருக்கும் மக்களை மீட்க இந்த பைக் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.