இனிமேல் கொரோனா ரிசல்ட் பத்தே நிமிடத்தில்…

செல்ட்ரியான் மருந்து நிறுவனம் தற்போது பத்தே நிமிடத்தில் கொரோனா முடிவை தெரிந்துக்கொள்ளும் சோதனை கருவியை கண்டுபிடித்துள்ளது.
celltrion southkorea

தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுபவர்கள், குறைந்தது இரண்டு நாட்கள் வரை முடிவுக்காக காத்திருக்கும் நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், 2002-ல் துவங்கப்பட்ட தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவங்களில் ஒன்றான செல்ட்ரியான் மருந்து நிறுவனம், கொரோனா முடிவை அறியும் கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்நிறுவனம், தற்போது பத்தே நிமிடத்தில் கொரோனா சோதனை முடிவை தெரிந்துகொள்ளும் கருவியை கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கருவி மூலம் வீட்டிலிருந்தபடியே கொரோனா முடிவை தெரிந்துக் கொள்ளலாம். மேலும், இந்தக் கருவிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் செலிட்ரியான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை கருவி, விரைவில் அண்டை நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version