பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் கவலை தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி பேசுகையில், நாங்கள் பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறோம். மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆனால், பாகிஸ்தான் தற்பொழுது பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது.
அதனால் எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் வெளிப்படையாக பேசி தீர்க்க விரும்புகிறோம். மேலும் எல்லையில் உருவாகக்கூடிய பயங்கரவாதத்தால் மற்ற நாடுகள் மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கும் பாதிப்பு உள்ளது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே, ஆப்கானிஸ்தான் மீது ட்ரோன் பறக்க விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், தேவைப்பட்டால் ஆப்கனில் ட்ரோன் தாக்குதல் நடத்துவது தொடரும் எனவும் ஜான் கெர்பி தெரிவித்துள்ளார்.