எவன் பார்த்த வேலைடா இது..ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் சேனல்

பாகிஸ்தானில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி திடீரென ஹேக் செய்யப்பட்டு, திரையில் இந்திய தேசியக்கோடி தோன்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல் போக்கானது தொடர்ந்து பலவிதங்களில் அவ்வப்போது வெளியிப்பட்டு வருகிறது. எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபடும்போதெல்லாம், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. சுதந்திர தினம் நெருங்கி வரும் சூழலில், இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த, எல்லையில் தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இயங்கும் டான் எனும் தனியார் செய்தித் தொலைக்காட்சி திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. நேற்று, பிற்பகல் சுமார் 3.36 மணியளவில், இடைவேளையின் போது விளம்பரம் ஒளிபரப்பாகியுள்ளது.

அந்த சமயத்த்தில் திடீரென தொலைக்காட்சியின் திரையில், இந்தியாவின் மூவர்ணக்கொடி தோன்றியதோடு, சுதந்திர தின வாழ்த்துக்கள் எனும் வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. அடுத்த சில நிமிடங்களுக்கு திரையில் இக்காட்சி தொடர்ந்து தோன்றியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, “நம்ம பையன் தா எவனோ வேலையை காட்டிட்டான்” என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்தசம்பவம் தொடர்பாக, உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்பாராத சமயத்தில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த பாகிஸ்தானிலும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Exit mobile version