மாடலிங் செய்ததால் தங்கையை சுட்டுக்கொன்ற அண்ணன்..!!

pakistani man murder
pakistani man

மாடலிங் மற்றும் நடனத் தொழிலில் தங்கை ஈடுபட்ட வந்த தங்கையை உடன் பிறந்த அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் லாகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிட்ரா. இவர் ஒகாரா என்கிற பகுதியில் பிறந்து வளர்ந்தார். அங்கியிருந்து பைசலாபாத்துக்கு தனியாக குடிபெயர்ந்த அவர் மாடலிங் மற்றும் திரையரங்குகளில் நடனமாடும் தொழிலை செய்து வந்தார்.

சிட்ராவின் இந்த நடவடிக்கை அவருடைய குடும்பத்தாரை வருத்தமடையச் செய்தது. தொழிலை விட்டு சிட்ரா வெளியேறவேண்டும் என குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். ஆனால் சிட்ரா தொழிலை கைவிடவில்லை.

கடந்த வாரம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்தாரைச் சந்திக்க சிட்ரா ஒகாரா சென்றுள்ளார். அப்போது தொழில் சம்மந்தமாக சிட்ராவுக்கும் அவருடைய அண்ணன் ஹம்சாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த சண்டை முற்றி வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து சிட்ராவை ஹம்சா சுட்டுக் கொன்றார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ஹம்சாவை கைது செய்தனர். உறவினர்கள் கேளிப் பேசியதால் சிட்ராவை கொன்றதாக ஹம்சா போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version