நாப்கின்கள் நாடுமுழுவதும் இலவசம்..இதுவே எங்கள் நாட்டின் சிறப்பம்சம்..உலகில் முதல் முறையாக அறிவித்த நாடு? எந்த நாடு?

பெண்களுக்கு நாடுமுழுவதும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ஏற்பாடு செய்யும் வகையில் ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

ஸ்காட்லாந்து:

பள்ளி,கல்லூரிகள் மற்றும் பொதுஇடங்கள் உள்பட பெண்கள் அவசர காலங்களில் பயன்படும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஏற்படும் செய்யும் வகையில் மோனிகா லெனான் என்ற பெண் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று இதனை பற்றிய மசோதா ஒன்றினை ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வீட்டு வறுமை காரணமாக சானிட்டரி நாப்கின் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் போன்றவை அந்த நாட்டு பெண்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் அனைவருக்கும் இலவசமாக வழங்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டது.இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் பல விவாதங்கள் தொடர்ந்த நிலையில் அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.இந்த வாக்கெடுப்பின் போது பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 121 உறுப்பினர்களும் ஆதரவு அளித்து இந்த மசோதாவானது சட்டமாக உருவெடுத்தது.

பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் போன்றவை நாடுமுழுவதும் இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்காட்லாந்து நாடு பெற்றுள்ளது.ஸ்காட்லாந்து நாட்டின் இந்த முடிவிற்கு பல நாடுகளும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

Exit mobile version