நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் :
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்று, அவர் அமர்ந்த முதல் நாளே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.இதேபோன்று துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
அதிபருக்கான அதிகாரத்துடன் பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை நியமனம் செய்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளிகளான கெளதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குனர் பதவிகளை ஜோ பைடன் ஏற்கனவே வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more – ஒருநாள் வீட்டுக்கு வாங்க நடராஜன்.. இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் வீடியோ காலில் பேசிய சரத்குமார்..
இந்த நிலையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்து ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் கடந்த சில மாதங்களுக்கு முன் நாசா அணியில் சேர்க்கப்பட்டார். பவ்யா லால் 2005-2020 வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் ஆராய்ச்சி உறுப்பினராக வெள்ளை மாளிகை அலுவலகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில், பொறியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் விரிவான அனுபவத்தை பவ்யா லால் செயல்படுத்துவார் எனவும், விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பவ்யாவின் பல்வேறு தொடர் ஆராய்ச்சிகளுக்கும், விண்வெளித் துறையில் அவர் செய்த பல பங்களிப்புகளுக்காகவும் அவர் செயல் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளது.