ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியதில் இருந்து அங்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துள்ளது.
ஆப்கனில் கந்தஹார் மாநிலத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்கும் கடைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தலிபான்களும், பொதுமக்களும் ஆயுதங்களை அதிகமாக வாங்குவதாக தெரிவிக்கின்றனர். சீனா மற்றும் ரஷ்யாவில் தயாரான துப்பாக்கிகளும் இங்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. அரசு படைகள் விட்டுச் சென்ற ஆயுதங்களையும் எடுத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.