விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கிருந்த சீக்கியர் : விசாரணையில் கொரோனாவிற்கு பயந்து இருந்ததாக தகவல்

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சீக்கியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வாஷிங்டன் :

கொரோனா பரவல் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் ஆதித்யா சிங் (36). கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ம் தேதி சிகாகோவில் உள்ள ஓஹேர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபொழுது கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்த நிலையிலும் கொரோனா பயத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திரும்பாமல் விமான நிலையத்தில் தாங்கி கொண்டார்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் கண்ணில் படாமல் மறைவான இடங்களில் பதுங்கி இருந்து சக பயணிகளிடம் இருந்து உணவை வாங்கி வந்து சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை விமான நிலையத்தில் பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட ஒரு பகுதியில் ஆதித்யா சிங் நிற்பதை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கண்டு விசாரித்த போது ஆதித்யா சிங் தான் விமான நிலைய ஊழியர் எனக்கூறி அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார்.

Read more – குஜராத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியது : 13 பேர் பலி, 6 பேர் படுகாயம்

அந்த அடையாள அட்டை கடந்த அக்டோபர் மாதம் ஊழியர் ஒருவரிடம் இருந்து காணாமல் போனது என்பது தெரியவந்தது.இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தாக கூறி ஆதித்யா சிங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version