சீனாவில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து கத்திக்குத்து நடத்திய சைக்கோ : சுட்டுவீழ்த்திய காவல்துறையினர்

சீனாவில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து கத்திக்குத்து நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர்.

பீஜிங்:

சீனாவின் தெற்குப் பகுதியில் கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. நேற்று யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கையில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் பள்ளிக் கூடத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்கள் சிலரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால் பயந்த பள்ளி குழந்தைகள் பயந்து பள்ளிக்குள் ஓட, அந்த நபர் தொடர்ந்து பள்ளிக்குள் புகுந்து கத்தியால் தாக்குதல் வேட்டையை நடத்தினார். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக பள்ளிக்குள் விரைந்தனர். காவல்துறையினரால் அந்த நபர் அங்கிருந்த ஒரு சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து பிணை கைதியாக பிடித்து கொண்டார். இதையடுத்து சிறுவனை விட்டுவிட்டு தங்களிடம் சரணடைந்து விடும்படி அந்த நபரை காவல்துறையினர் வலியுறுத்திய நிலையில் அந்த நபர் கேட்கவில்லை.

Read more – மகாராஷ்டிர மாநிலத்தில் சிறைச்சாலையை சுற்றுலா தலமாக மாற்ற புதிய திட்டம்..

இதனால், “ஸ்னைப்பர்ஸ்” என்று அழைக்கப்படும் குறிபார்த்து சுடுவதில் திறமைவாய்ந்த போலீசாரை வரவழைக்கப்பட்டு அவரை சுட்டுவீழ்த்தி அந்த சிறுவனை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் 56 வயதான வாங் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version