மக்களை கவர புதிய முயற்சி …மிதக்கும் திரைஅரங்கம்!!!

கொரோனா வைரஸ் பரவல் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன அதில் முக்கிய துறை,திரைத்துறை, பட பிடிப்புக்கள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற வில்லை திரை அரங்கங்களும் உலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளன.ஒரு சில நாடுகளில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் போதுமான ரசிகர்களை திரையரங்குக்கு வராததால் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் நதியில் மக்களை கவரும் வண்ணம் மிதக்கும் தியேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பாரீஸ் பிளேஜஸ்’ என்ற நிகழ்ச்சி அங்குள்ள சீன் என்ற ஆற்றில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த ஆற்றின் நதிக்கரையில் கொண்டாட்டங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வித்தியாசமாக மிதக்கும் தியேட்டர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பிரான்ஸ் நாடு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் சினிமா ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மிதக்கும் தியேட்டர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. MK2 என்ற சினிமா நிறுவனம் அமைத்துள்ள இந்த தியேட்டரில் நதிக்கரையில் ஸ்க்ரீன் வைக்கப்பட்டுள்ளது. அதை அந்த நதியில் உள்ள படகுகளில் உட்கார்ந்து கொண்டு திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்

சுமார் 38 படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் ஒவ்வொரு படகிலும் நான்கு முதல் ஆறு பேர் அமர்ந்து திரைப்படம் பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படகில் உட்கார்ந்து இருப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த புதுவித முயற்சி மக்களின் வரவேற்பை பொறுத்து நீடிக்க படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version