உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்புரிந்தது. ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சியானது 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டாலும், ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என ஒரு கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த சம்பவத்தினால் அதிபர் புதினுக்கு பின்னடைவாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். வாக்னர் படையின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது:- தற்போது ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் அது நிச்சயம் தோல்வியில் தான் முடியும். ரஷிய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும் என மேற்கு நாடுகளின் எண்ணம் இருக்கிறது. வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷ்ய மக்களுக்கு நன்றி. வாக்னர் படை ரஷிய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம். ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி என்று புதின் கூறினார்.
ரஷ்யாவை அதிர வைத்த கூலிப்படை பற்றி அதிபர் புதின் விளக்கம்!
-
By mukesh

Related Content
கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
By
daniel
December 17, 2025
ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!
By
daniel
September 1, 2025
12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்
By
nataraj
July 14, 2025
துணைக் குடியரசுத்தலைவர் புதுச்சேரி வருகை
By
daniel
June 13, 2025
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024
உத்திரகாண்ட்டிலும் உயர்ந்தது தக்காளியின் விலை
By
mukesh
July 7, 2023